எல் ஐ சி ஆதார்

20140315_172634

{ 0 comments }

1000
வங்கிகளிலான சேமிப்பு வைப்புநிதிகள் ஒவ்வொருவரின் சேமிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் உடனடித் தேவைகளுக்கு ஏற்ப ரொக்கமாக மாற்றக்கூடிய வசதியைக் (liquidity) கொண்ட காரணத்தால் அனைவருக்கும், குறிப்பாக வயதானவர்களுக்கு வங்கி வைப்பு நிதி தவிர்க்க முடியாததாகி விட்டது.
நீங்கள் வங்கிகளில் உங்கள் சேமிப்பைத் தனிநபர் வைப்பு நிதியாக (Term Deposit) வைத்திருந்தாலோ அல்லது புதிதாக வைப்பு நிதி துவங்குவதாக இருந்தாலோ அறியவேண்டியவை என்ன?
வைப்பு நிதி வகைகள் பொதுவாக இரண்டு வகைப்படும்.
ஃபிக்சட் டெபாசிட்!
குறிப்பிட்ட கால இடைவெளியில் (மாதா மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை, நீங்கள் கணக்கு துவங்கும் போது கேட்டுக் கொண்டதற்கு இணங்க) உங்கள் வைப்பு நிதிக்கான வட்டி உங்கள் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.  வைப்பு நிதியின் முதிர்வு காலத்தில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த அசல் தொகை மீண்டும் அப்படியே கிடைக்கும். இதனைப் பொதுவாக ஃபிக்சட் டெபாசிட் என்று கூறுவார்கள்.
குமுலேட்டிவ் டெபாசிட்’ பிளான்!!
வட்டி கூட்டு வட்டியாகக் கணக்கிடப்பட்டு (வட்டிக்கு வட்டி) மொத்த வட்டியும் முதிர்வுத் தொகையில் சேர்த்துத் தரப்படும். பல வங்கிகளில சிறப்புப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் இத்தகைய டெபாசிட் திட்டங்களை ‘ரீஇன்வெஸ்ட்மெண்ட் டெபாசிட் அல்லது குமுலேட்டிவ் டெபாசிட்’ பிளான் என்று குறிப்பிடுவார்கள். வட்டிக்கு வட்டி கணக்கிடப் படுவதால் டெபாசிட்தாரர் இத்திட்டத்தில் பெறும் மொத்த வட்டித் தொகை, ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் பெரும் வட்டியை விடச் சற்றே அதிகமாக இருக்கும்.
தன் தேவை அறிந்து மேலே குறிப்பிட்ட திட்டங்களில் ஒன்றை டெபாசிட்தாரர் தேர்ந்தெடுக்க வேண்டும்.  ஏனெனில் வட்டி இழப்பு இல்லாமல் ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு முதிர்வு காலத்திற்கு முன்னர் மாற இயலாது.
கணக்கு யார் பெயரில் துவங்கலாம்?
டெபாசிட் கணக்கைத் தனிநபர் கணக்காகவோ, இருவர் பெயரிலோ, இருவருக்கு மேற்பட்டோர் பெயரிலோ துவங்கலாம்.
வாடிக்கையாளர் தேவைகளைக் கருத்தில் கொண்டு வங்கிகள் ஜாயின்ட் கணக்கு (இருவரோ அதற்கு அதிகமானவர்களோ வரவு செலவு செய்யும்) வசதியை அளிக்கின்றன.  இதன்படி எந்த ஒரு வங்கிக் கணக்கையும் (சேமிப்புக் கணக்கு மற்றும் வைப்பு நிதிக் கணக்குகள்) ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் பெயர்களில் துவங்கலாம்.  அது ஜாய்ன்ட் (Jointly or Survivor) கணக்கு, இருவரில் ஒருவர் (Either or Survivor) அல்லது எவரேனும் ஒருவர் (Anyone or Survivor) என்று நெறிப்படுத்தப் பட்டுள்ளது. ‘ஜாய்ன்ட் கணக்கு’ என்றால் குறிப்பிட்ட கணக்கிலிருந்து தொகையைத் திருப்பிப் பெறுவதற்கு இருவரும் சேர்ந்து கையெழுத்திட வேண்டும். ‘இருவரில் ஒருவர் கணக்கு’ என்றால் பணம் எடுப்பதற்கு இருவரில் ஒருவர் கையெழுத்திட்டாலே போதுமானது. ‘எவரேனும் ஒருவர் கணக்கு’ என்றால் கணக்குத் துவங்குவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டவர்களில் எந்த ஒருவரும் வரவு செலவு செய்வதற்கு அதிகாரம் பெற்றவராகிறார்.
வைப்பு நிதியில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு முன்னர் டெபாசிட்தாரர் ஒருவர் காலமாகிவிட்டால் வாழ்பவருக்கு (Survivor) நிலுவையில் இருக்கும் தொகை வட்டியுடன் அளிக்கப்படும்.
(இவை தவிர அறக்கட்டளை, இந்து கூட்டுக் குடும்பம், நிறுவனம் பெயர்களிலும் வைப்புநிதி துவங்கலாம்).  மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம்பெரும்பாலான வங்கிகள் தங்கள் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களில் கால் முதல் அரை சதவிகிதம் வரை பொதுமக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட அதிகமாக மூத்த குடிமக்களுக்கு அளிக்கின்றன. இது வங்கிக்கு வங்கி, திட்டங்களுக்குத் திட்டம் மாறுபடலாம்.
ஆட்டோ ரின்யூவல்!
பெரும்பாலான வங்கிகள் முதிர்வு தேதியன்று டெபாசிட் ரசீது குறிப்பிட்ட கிளையில் சமர்ப்பிக்கப்படாமலும், புதுப்பித்தல் தொடர்பான வேண்டுகோள் வாடிக்கையாளரிடமிருந்து வராமல் இருந்தாலும், டெபாசிட் ஏற்கனவே இருந்த காலத்திற்கு அப்போதைய வட்டி விகிதத்தில் மீண்டும் புதுக்கப்படும்.  புதிப்பிக்கப்பட்ட டெபாசிட்டின் விவரம் ஏந்திய மடல் (intimation letter) மட்டும் டெபாசிட்தாரரின் முகவரிக்கு அனுப்பப்படும்.
வாரிசு நியமனம்:
வாரிசு நியமனம் என்பது முதிர்வு தேதிக்கு முன்னர் தான் காலமாகிவிட்டால் தன் பெயரில் இருக்கும் டெபாசிட் தொகையை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற விவரத்தை வாடிக்கையாளர் வங்கிக்குத் தரும் அதிகாரம்.  டெபாசிட் துவங்கும் போதே வாடிக்கையாளர்கள் வாரிசு நியமனம் செய்து விண்ணப்பத்தை வங்கிக்குச் சமர்ப்பித்தல் நலம். வாரிசு விண்ணப்பம் செய்வதற்கு வாரிசுதாரரின் கையெழுத்து தேவையில்லை. ஒரு வேளை நியமிக்கப்படும் வாரிசுதாரர் குழந்தையாக, மைனராக இருந்தால் அவரது காப்பாளர் (Guardian)  பெயரும், விவரமும் தரப்பட வேண்டும். ஜாய்ண்ட் கணக்குகளுக்கும் வாரிசு நியமன வசதி உண்டு. டெபாசிட்தாரர் இறந்து விட்டால், வாரிசு நியமனம் செய்யப்பட்டவர் ஒரு விண்ணப்பமும் டெபாசிட்தாரரின் இறப்பு சான்றிதழும் கொடுத்து  குறிப்பிட்ட வங்கியின் கிளையிலேயே பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
டெபாசிட் ப்ரீகுளோஷர்!!
டெபாசிட்டை முதிர்வுதேதிக்கு முன்னரே முடித்துக்கொள்ள வங்கிகள் வழிவகை செய்துள்ளன. டெபாசிட் வங்கியில் இருந்த காலத்தைக் கணக்கிட்டு அந்தக் காலத்திற்கு உள்ளான வட்டி விகிதத்தில் இருந்து ஓரிரு சதவிகிதம் குறைவாக வட்டி கணக்கிடப்பட்டுத் (penalty) தொகை தரப்படும். 1.4.2013 முதல் பிரீ குளோஷருக்கான அபராத வட்டியை அந்தந்த வங்கிகளே முடிவு செய்துகொள்ள மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரம் அளித்துள்ளது. பல வங்கிகள் தற்போது அபராத வட்டியின்றி டெபாசிட்டுகளை முன்னரே முடித்துக்கொள்ள அனுமதி அளிக்கின்றன.  (ஒருவேளை உங்கள் டெபாசிட் தொகை ஒரு கோடிக்கு மேலாக இருந்ததென்றால்(!) டெபாசிட்டைப் பெருநிதியாகக் (Bulk Deposit) கணக்கிட்டு முன்னரே முடித்துக் கொள்வதற்கான அனுமதியை வங்கி மறுக்கலாம்.
டெபாசிட் கடன்!
அனைத்து வங்கிகளும் வைப்புதாரர்களின் தேவை கருதி அவர்களது வைப்பு நிதியில் கடன் பெற்றுக்கொள்ள அனுமதிக்கின்றன. அதற்கான வட்டி விகிதம் டெபாசிட்டிற்கு அளிக்கப்படும் வட்டியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் அதிகமாக இருக்கும்.  பங்குத் தொகை (Margin Money) 10 முதல் 25 சதவிகிதம் இருக்கலாம்.  அதாவது டெபாசிட் தொகை ஒரு லட்சம் என்றால் கடன் தொகை, வங்கியைப் பொறுத்து ரூ.75000 முதல் ரூ.90000 வரை கிடைக்கும்.  மார்ஜின் தொகை குறைந்தால் வட்டிவிகிதம் அதிகமாகும்.  மாதாமாதம் வட்டி பெறுகின்ற ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் இருந்து கடன் பெற்றால் கடன் பெற்ற பிறகு கொடுக்கப்பட வேண்டிய வட்டித்தொகை கடன் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு வேளை டெபாசிட் முதிர்வு தேதிக்கு முன்னர் கடன் அடைக்கப்படா விட்டால் முதிர்வு தேதியன்று கடன் கணக்கில் நிலுவையில் உள்ள தொகை பிடித்தம் செய்யப்பட்டு மீதி உள்ள தொகை டெபாசிட்தாரருக்கு வழங்கப்படும்.
டெபாசிட் வட்டிக்கான வரிபிடித்தம். (TDS – Tax Deducted at Source)!
வைப்புநிதிக்கான வட்டி ரூ.1000 ற்கு மேல் கொடுக்கப்படும்போது, வங்கி வழங்கப்படும் வட்டித் தொகையில் 10.3% சதவிகிதம் (Educational Cess – கல்வித் தீர்வை உட்பட) பிடித்தம் செய்து வருமான வரித்துறைக்கு அனுப்பும். அதுவே வட்டித் தொகை ரூ.10 லட்சத்திற்க மேல் என்றால் சர்சார்ஜ் உட்பட 11.33% பிடித்தம் செய்து அனுப்பும்.   நீங்கள் வருமான வரி எல்லைக்குள் உட்பட்டவர் இல்லையென்றாலோ அல்லது நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி பூஜ்யம் என்றாலோ அதற்கு உரிய படிவத்தை (15 G) வங்கியில் சமர்ப்பித்து வரிப்பிடித்தத்தைத் தவிர்க்கலாம்.  மூத்த குடிமக்கள் படிவ எண் 15H சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட படிவங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரத்தில் கொடுக்கப்பட வேண்டும்.
வங்கி வைப்பு நிதிகளுக்கான காப்புறுதி!
நிதிநிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகளைவிட, வங்கிகளில் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகள் பொதுவாகப் பாதுகாப்பு உடையவை. மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்ஷூரன்ஸ் மற்றும் கிரெடிட் காரண்டி கார்ப்பரேஷன் (Deposit Insurance & Credit Guarantee Corporation) வங்கி டெபாசிட்டுகளுக்கு அதிக பட்சம் ரூ.ஒரு லட்சம் வரை காப்புறுதி வழங்கிகுறது.  இது ஒருவர் ஒரு வங்கியில் (அவ்வங்கியின் அனைத்துக் கிளைகளையும் சேர்த்து) மொத்த வைப்பு எவ்வளவு வைத்திருந்தாலும் கிடைக்கும் உச்சபட்ச அளவீடு.

{ 0 comments }

liclogo
இந்தியாவில் உள்ள காப்பீடு மற்றும் நிதி நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கிறது எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம். இதில் ஏஜென்ட்டுகள் எனப்படும் முகவர்களுக்கு நியமனம் நடைபெற உள்ளது.

எல்.ஐ.சியின் காப்பீடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் இந்த பணிக்கு நகர்ப்புறங்களில் சேர விரும்புபவர்கள் 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களாகவும், கிராமப்புறமாக இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

முகவர்களாக விரும்புபவர்களுக்கு 50 மணி நேரங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குப் பிறகு ஆன்லைன் மூலமாக தேர்வு வைக்கப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள காப்பீடு ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம், முகவர்களுக்கான உரிமத்தினை வழங்குகிறது. முகவர்களாக சேர்ந்த ஓராண்டு காலத்திற்குள் 12 பாலிசிதாரர்களை சேர்க்க வேண்டும். ஆண்டிற்கு 1 லட்சம் வரை பிரீமியம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

{ 0 comments }